search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"

    • ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் கடந்த ஆண்டை விட தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
    • பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் பல நகரங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கடுமையான கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது படுக்கை அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி.யின் படத்தை பகிர்ந்து செய்துள்ள பதிவு எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூருவில் வசித்து வரும் பிரேரணா நிரீக்ஷா அமன்னா என்ற அந்த பெண்ணின் பதிவில், பெங்களூருவில் இருந்த 20 ஆண்டுகளில் எங்களுக்கு ஏ.சி. தேவை என்று நினைத்ததில்லை.

    முன்னதாக இந்த நகரம் இதமான வானிலையுடன் இருந்தது. ஆனால் தற்போது ராஜஸ்தானில் தங்கி இருப்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் கடந்த ஆண்டை விட தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் உள்ளது என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒரு பயனர், நான் கடந்த 2016-ம் ஆண்டு ஏ.சி. வாங்கி பயன்படுத்தினேன். அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் அதனை பயன்படுத்த தொடங்கி உள்ளேன் என்றார். அதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
    • வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

    நெல்லை:

    சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலமாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பானுமதி(40) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து, பானுமதி கடந்த 29-ந்தேதி ஆசை வார்த்தை கூறி நித்யானந்தமை நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பானுமதி வீட்டுக்கு சென்ற அவரை அங்கிருந்த மேலும் 4 பேர் கும்பல் சேர்ந்து கடத்தி சென்று நகை, ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறித்தது.

    இதுகுறித்து நித்யானந்தம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தியிடம் அளித்த புகாரின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் பானுமதி, அவரது கூட்டாளிகளான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பார்த்தசாரதி(46), வெள்ளத்துரை(42), ரஞ்சித்(42), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலை(40) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் இதேபோல் பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பான தகவல்கள் வருமாறு:-

    பானுமதிக்கு ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி கல்லூரி படிப்பு முடித்த ஒரு மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இவரது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பானுமதியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

    இந்நிலையில் பானுமதிக்கு தனது பள்ளி தோழனான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெள்ளத்துரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பானுமதி பட்டப்படிப்பு முடித்தவர் என்பதால் முகநூலை பயன்படுத்தி அதில் தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களை தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார்.

    அவர்களிடம் மாதக்கணக்கில் பழகி நம்ப வைத்து, ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அவர் தொழிலதிபர்களை வரவழைத்து படுக்கை அறைக்கு அழைத்து சென்று கதவுகளை பூட்டிக்கொள்வார். அடுத்த 5 நிமிடங்களில் வெள்ளத்துரை தனது கூட்டாளிகள் 3 பேருடன் அங்கு வந்து கதவை தட்டுவார்.

    பின்னர் எனது மனைவியை கற்பழிக்க முயன்றுள்ளாய் என கூறி போலீசில் புகார் அளித்து உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என்று கூறி அந்த தொழில் அதிபர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் உடைமைகளை பறித்து வந்துள்ளனர்.

    தங்களின் பிடியில் சிக்கும் தொழிலதிபர்களை பொன்னாக்குடி பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் தங்களது பெயரில் உள்ள ஒரு தனி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளனர்.

    சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த கும்பல் சென்னை, கோவை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களை குறிவைத்து ஆசைவார்த்தை பேசி நெல்லைக்கு வரவழைத்து அவர்களிடம் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இவர்களது வலையில், 40 வயதில் தொடங்கி 65 வயது வரையிலான தொழிலதிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சபலத்தால் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இவ்வாறாக அந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது.

    வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும். அதற்கு பணத்தோடு போகட்டும் என்று அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே பார்த்தசாரதியை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பார்த்தசாரதிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், பல வருடங்களாக இந்த கும்பல் தொழிலதிபர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து பணத்தை பறித்து வந்துள்ளனர்.

    இந்த கும்பலிடம் தங்களது பணத்தை இழந்தவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அந்த கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதன்பின்னரே இதுவரை எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி எவ்வளவு பணத்தை இவர்கள் பறித்துள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.

    அதேநேரத்தில் பணத்தை இழந்த தொழிலதிபர்கள் எங்களிடம் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் பெயர் ரகசியம் காக்கப்பட்டு அவர்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நிமிடங்களே ஓடும் வீடியோவில், காளைகளின் சண்டையால் கடைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் மற்றும் மனிதர்களுக்கிடையே நடைபெறும் வாக்குவாதம், சண்டைகளும் பதிவிடப்படுகின்றன. அப்படி ஒரு சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த சண்டையானது மனிதர்களுக்கு இடையே அல்ல, இரண்டு காளைகளுக்கு இடையேயானது.

    கார் கீ காலேஷ் என்பவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தான் தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், இரண்டு காளைகள் சண்டை போட்டுக் கொண்டு புடவை கடைக்குள் நுழைகிறது. அங்கிருந்தவர்கள் காளைகள் சண்டையிடுவதை பார்த்ததும் கடையில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் கடைக்கு வெளியே இருந்து காளைகள் சண்டையிடுவதை பார்க்கின்றனர். சில நிமிடங்களே ஓடும் வீடியோவில், காளைகளின் சண்டையால் கடைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், 'இவர்கள் இருவரும் புடவைகளை வாங்க வந்தார்கள், ஆனால் அவர்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கவில்லை' என பதிவிட்டுள்ளார்.

    • சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
    • அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.

    அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வரும் ஆஸ்லே மாசிஸ் கிளாஸ் என்ற பெண்ணுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

    முதலில் பெற்றோர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திரைப்படங்களை பார்ப்பதால் சிறுமி கற்பனையாக கருதி இருக்கலாம் என நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.

    இதனால் சிறுமியின் பெற்றோர் அந்த வீட்டில் வெப் கேமரா பொருத்தி ஆய்வு செய்தனர். அப்போது தான் சிறுமியின் படுக்கை அறையில் ஒரு பெரிய தேன் கூடு இருப்பதை கண்டனர். இதுகுறித்து பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு தெரிவித்தனர். அதன்படி வீட்டிற்கு வந்த தேனீ வளர்ப்பாளர், சிறுமியின் படுக்கை அறையில் இருந்து சுமார் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் தேனீக்கள் கொண்ட 45 கிலோ எடை உடைய தேன் கூட்டை அகற்றி உள்ளார்.

    • வீட்டின் சமையல் அறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்தி கொண்டிருந்த போது அவர்களது கண்களில் ஒரு பானை தென்பட்டது.
    • புதையல் கிடைத்த மகிழ்ச்சியை தம்பதியினர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

    இங்கிலாந்தில் உள்ள தெற்கு போர்டான் பகுதியை சேர்ந்த பெக்கி- ராபர்ட் தம்பதி பழைய வீடு ஒன்றை வாங்கினர். அதை புதுப்பிக்கும் வேலைகளை தம்பதி செய்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்தி கொண்டிருந்த போது அவர்களது கண்களில் ஒரு பானை தென்பட்டது. அதில் மேல் பகுதி முழுவதும் மண் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றை விலக்கி பார்த்தபோது பானை முழுவதும் தங்க காசுகளும், வெள்ளி காசுகளும் இருந்தன.

    ராபர்ட் அவற்றை எண்ணினார். மொத்தம் 1,029 நாணயங்கள் இருந்தன. அவை 1642-ம் ஆண்டுக்கும், 1644-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் மன்னர்களின் உருவம் பதித்த நாணயங்கள் ஆகும். புதையல் கிடைத்த மகிழ்ச்சியை அந்த தம்பதியினர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

    பின்னர் அவை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் தம்பதிகளுக்கு 60 ஆயிரம் பவுன்ட் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை தனது மகனின் படிப்புக்கும், வீட்டை புதுப்பிக்கவும் பயன்படுத்த உள்ளதாக தம்பதியினர் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு ஓரிகானின் போர்ட்லேண்ட் பகுதியில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார்.
    • எனது கனவு வீட்டை வாங்குவதற்கும் நான் இந்த பணத்தை பயன்படுத்துவேன் என்றார்.

    லாவோஸ் நாட்டை சேர்ந்தவர் செங்சைபன். 46 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அமெரிக்காவில் குடியேறி உள்ள செங்சைபன் கடந்த சில நாட்களுக்கு ஓரிகானின் போர்ட்லேண்ட் பகுதியில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு 1.3 பில்லியன் டாலர்கள் பரிசு விழுந்துள்ளது.

    இந்திய மதிப்பில் ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்புடைய இந்த பரிசு தொகையை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த பணத்தை புற்றுநோய் சிகிச்சை பெற பயன்படுத்த இருப்பதாக செங்சைபன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், இப்போது நான் என் குடும்பத்தை ஆசீர்வதித்து எனக்காக ஒரு நல்ல மருத்துவரை பணியமர்த்த முடியும். என் வாழ்க்கை மாறிவிட்டது. எனது கனவு வீட்டை வாங்குவதற்கும் நான் இந்த பணத்தை பயன்படுத்துவேன் என்றார்.

    • வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பொது மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை வாலிபர் ஒருவர் ஏ.சி.யாக பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எக்ஸ் தளத்தில் எமினென்ட் வோக் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை ஒருவர் திறந்து வைத்திருக்கிறார். அதற்கு முன்பு ஏர் கூலரையும் வைத்துள்ள நபர், அவற்றின் முன்புறம் கட்டிலில் நிம்மதியாக படுத்து உறங்குவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த முறையில் வெப்பம் மேலும் அதிகரிக்கும். குளிர்ச்சி இருக்காது என சிலர் பதிவிட்டுள்ளனர். இயற்பியல் விதிப்படி இந்த முறை வெப்பத்தை தான் அறையில் உருவாக்கும் என சிலரும், இப்படி ஃபிரிட்ஜை திறந்து வைத்தால் அது விரைவிலேயே பழுதாகிவிடும் என சிலரும் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் உங்களிடம் இருப்பதை வைத்து சிறப்பான பொருளை உருவாக்குங்கள் என பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சில பயனர்கள், அவரது புதுமையான செயலை பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்ஸ்டாகிராம் மற்றும் போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டனர்.
    • தனது காதலி இன்னமும் வரவில்லையே என்று ஏக்கத்தில் அங்கு வெகு நேரம் காத்திருந்தார்.

    கான்பூர்:

    காதல்கோட்டை படத்தில் நடிகர் அஜித்தும் தேவயானியும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிப்பார்கள். கிளைமாக்சில் இருவரும் ஒன்று சேர்வார்கள்.

    பார்க்காமல் காதல் வந்த காலம் போய், செல்போனில் போட்டோவை பார்த்து பழகும் காலம் தற்போது புது ஸ்டைலாக உள்ளது. ஆனால் போட்டோவில் பார்த்த அழகு நேரில் இல்லாமல் போனால் காதலர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து செல்லும் நிலையும் ஏற்படுகிறது.

    இதேபோல் இன்ஸ்டாகிராமில் இளம்வயது பெண்ணின் போட்டோவை பார்த்து அவருடன் பழகிய வாலிபர் ஆனால் நேரில் பார்த்த போது அந்த பெண் வயதான தோற்றத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து அவரை தாக்கியுள்ளார்.

    இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தீபேந்திரா சிங் (வயது 20). இவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தார். அதன் மூலம் இளம்பெண் ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

    அந்த பெண் இன்ஸ்டாகிராம் முகப்பு பகுதியில் தன்னுடைய 20 வயது அழகிய போட்டோவை வைத்திருந்தார்.

    இந்த போட்டோவை பார்த்து அழகில் மயங்கிய தீபேந்திரா சிங் அந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகினார். அவருடன் காதல் மொழியிலும் பேசி வந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மற்றும் போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டனர். இதற்கான நாளும் இடமும் குறிக்கப்பட்டது.

    தனது அழகான காதலியை சந்திக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தீபேந்திரா சிங் மிடுக்கான ஆடை அணிந்து மிகவும் ஆர்வமுடன் துள்ளி குதித்து அங்கு சென்றார். ஆனால் தனது காதலி இன்னமும் வரவில்லையே என்று ஏக்கத்தில் அங்கு வெகு நேரம் காத்திருந்தார்.

    அப்போது சுமார் 45 வயது பெண் ஒருவர் அவரிடம் நெருங்கி வந்தார். அந்த பெண்ணை பார்த்த தீபேந்திரா சிங் நீங்கள் யார் என்று அவரிடம் கேட்டார். அப்போது நீங்கள் தீபேந்திரா சிங்கா என்று அந்த பெண் கேட்டார்.

    அவர் ஆமாம் என்று ஆமோதித்தது தான் தாமதம் அந்த பெண் நான் உங்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசிய பெண் என்றார். அதை கேட்ட தீபேந்திரா சிங் அதிர்ச்சியில் உறைந்தார்.

    போட்டோவில் உள்ளது யார் என்று கேட்டார். அது நான் தான் என்னுடைய இளம் வயது போட்டோ அது, எனக்கு இப்போது 45 வயதாகிறது என்றார்.

    இதை கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தீபேந்திரா சிங் அந்த பெண்ணை அடித்து உதைத்தார். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து கொண்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து அந்த பெண் அடையாளம் தெரியாத வாலிபர் தன்னை தாக்கி சென்று விட்டதாக போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தீபேந்திரா சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தில் நான் ஏமாற்றமடைந்தால் இவ்வாறு நடந்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    • வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார்.
    • பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.

    உணவு பொருட்கள் முதல் பிறந்தநாள் கேக் வரை பல பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் தனது சகோதரி குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக ஸ்விக்கியில் கேக் ஆர்டர் செய்துள்ளார்.

    அப்போது வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கில் அதிக வாசகம் எதுவும் வேண்டாம் என கருதிய அவர், தனது ஆர்டருடன் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' சேர்த்து அனுப்பவும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் பேக்கரி ஊழியர்கள், இதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கு ஆர்டர் கேக்கில் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' என எழுதி கொடுத்துள்ளனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, நாங்கள் ஆச்சரியம் கொடுக்க நினைத்தோம், ஆனால் ஸ்விக்கி எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.



    • லாட்டரிக்கு ஜாக்பாட் பரிசாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 680 டாலர்கள்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.9 கோடி) பரிசு விழுந்துள்ளது.
    • மகளும் உடனே லாட்டரியை வாங்கி பரிசு விழுந்த எண்ணை சரி பார்த்த போது அவருக்கு ஜாக்பாட் பரிசு விழுந்திருப்பது உண்மை என்பது தெரிய வந்தது.

    கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 22-ந்தேதி மேரிலாந்தில் உள்ள ராயல் பார்ம்ஸ் உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சிக்கன் உணவு ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவர் 10 டாலர் மதிப்புள்ள கேசினோ ராயல் ஸ்லாட்ஸ் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார். அந்த லாட்டரிக்கு ஜாக்பாட் பரிசாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 680 டாலர்கள்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.9 கோடி) பரிசு விழுந்துள்ளது.

    இதையறிந்த அந்த மூதாட்டி தனது மகளிடம் லாட்டரி சீட்டை காட்டி எனக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என நினைக்கிறேன் என்று கூறி உள்ளார். அவரது மகளும் உடனே லாட்டரியை வாங்கி பரிசு விழுந்த எண்ணை சரி பார்த்த போது அவருக்கு ஜாக்பாட் பரிசு விழுந்திருப்பது உண்மை என்பது தெரிய வந்தது.

    தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பெயரை நம்பிக்கையுள்ள பாட்டி என்று அடையாளப்படுத்திக் கொண்ட அந்த மூதாட்டி, பரிசுத்தொகையை என்ன செய்யலாம் என்று இன்னும் யோசிக்கவில்லை. நான் இன்னும் இன்பஅதிர்ச்சியில் இருக்கிறேன். நான் வாழ்க்கையை அனுபவிக்க போகிறேன். பரிசுத் தொகையில் பேரக்குழந்தைகளுக்கு உதவி செய்வேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது.
    • சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

    பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இவரது பதிவுகள் பலருக்கு உந்துதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு சிறுமியின் கண்ணியமான செயல் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது. அப்போது வாகனங்கள் அனைத்தும் சாலையையொட்டி நிற்கும் நிலையில் சக்கர நாற்காலியில் முதியோரை தள்ளிக் கொண்டு செல்லும் சிறுமி ஒவ்வொரு 3 அடிகளிலும் போக்குவரத்து சிக்னலில் வாகனங்களில் காத்து நிற்கும் கார் டிரைவர்கள் முன்பு பணிந்து நின்று அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சிகள் உள்ளது.

    சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் சிறுமியின் செயலை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தன்னிடம் காசு இல்லையே என அந்த சிறுமி கூறுகையில் அந்த மர்ம பரிசு பெட்டியை அவளிடம் கொடுத்து பிரித்து பார்க்க சொல்கிறார்.
    • பிரபல கைகெடிகார நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று இருந்தநிலையில் அதனை அணித்து கொள்ளுமாறு சிறுமியை அறிவுறுத்துகிறார்.

    பெங்களூருவை சேர்ந்தவர் பிரதீஷ். சமூக வலைத்தள பிரபலமான இவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தநிலையில் சாலையோரத்தில் டீ-சர்ட் விற்றுவந்த சிறுமி ஒருவருக்கு பரிசு பொருள் வாங்கி கொடுப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சாலையில் பிரதீஷ் நடந்து சென்று கொண்டிருக்கையில் நடைபாதையில் டீ-சர்ட் விற்கும் சிறுமியை அவர் பார்க்கிறார். பின்னர் அந்த சிறுமியிடம் சென்று ரூ.10 கொடுத்து தன்னிடம் உள்ள மர்ம பரிசுபொருள் பெட்டியை வாங்கி கொள்கிறாயா? என அவர் கேட்கிறார். அதற்கு தன்னிடம் காசு இல்லையே என அந்த சிறுமி கூறுகையில் அந்த மர்ம பரிசு பெட்டியை அவளிடம் கொடுத்து பிரித்து பார்க்க சொல்கிறார்.

    அதில் பிரபல கைகெடிகார நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று இருந்தநிலையில் அதனை அணித்து கொள்ளுமாறு சிறுமியை அறிவுறுத்துகிறார். ஆனந்த அலையில் சிறுமி கைகெடிகாரத்தை அணிவதுடன் முடிகிறது. "சின்ன செய்கை பெரிய மாற்றத்தை உண்டாக்கும்-அன்பை பரப்புங்கள்" என்ற கருத்துடன் அவர் பதிவிட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை இதுவரை 4½ லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    ×